கலிஃபோர்னியா: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் எல் செகுண்டோ நகரில் உள்ள ஷெவ்ரோன் நிறுவனத்தின் சுத்திகரிப்பு ஆலையில் பெருந்தீ மூண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருப்பு குறிப்பிட்ட ஒரு வட்டாரத்திற்குள் கட்டுப்படுத்தப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறினார். தீப்பற்றியதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்று லாஸ் ஏஞ்சலிஸ் டைம்ஸ் குறிப்பிட்டது. ஆலையில் வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அதிகாரிகளும் தீயணைப்பாளர்களும் அங்கு விரைந்தனர்.
மாநில ஆளுநர் அலுவலகம் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசாங்க அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவதாக எக்ஸ் ஊடகத்தில் தெரிவித்தது.
தீச்சம்பவத்தில் எவருக்கும் காயமில்லை என்றும் ஆலையிலிருந்து எவரும் வெளியேற்றப்படவில்லை என்றும் கூறப்பட்டது.