ஹாங்காங் மத்திய வர்த்தகக் கட்டடத்தில் தீ: மூவர் காயம்

1 mins read
376df48f-6329-4fd7-9277-b92b3a8f6dc4
‘சைனாகெம் டவர்’ என்ற கட்டடம் ஹாங்காங்கின் மத்திய வர்த்தக வட்டாரத்தில் உள்ளது. - படம்: சவுத் சைனா மார்னிங் போஸ்ட்
multi-img1 of 2

ஹாங்காங் நகரின் மத்திய வர்த்தக வட்டாரத்தில் ‘சைனாகெம் டவர்’ என்ற கட்டடத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 18) மதியம் தீப்பிடித்துக்கொண்டது. எண்கள் 34-37 கொனோட் ரோடு சென்ட்ரல் முகவரியில் தீ மூண்ட சம்பவம் பற்றி அன்று மாலை 4.24 மணிக்கு தகவல் கிடைத்ததாக ஹாங்காங் காவல்துறை தெரிவித்தது. பின்னர் 12 நிமிடங்களில் தீயின் தீவிரம் அதிகரித்தது எனவும் கூறப்பட்டது.

தீயை நேரில் கண்டவர்கள் கட்டடத்தின் பக்கவாட்டில் மறைப்புகளால் மூடப்பட்டிருந்த கட்டுமான இரும்புத் தடுப்புகளில் முதலில் தீ பிடித்ததாகக் கூறினர்.

அந்த கட்டடம் 25 மாடிகளைக் கொண்டது. அதனுள் அலுவலகங்களும் சில்லறை வர்த்தகக் கடைகளும் உள்ளதாக அதன் இணையப் பக்கம் பதிவிட்டுள்ளது. இரண்டு ஆடவர்களும் ஒரு மாதும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தீ நடந்த இடத்திலிருந்து 50பேர் தப்பிச் சென்றுவிட்டாத தீயணைப்பு வீரர்கள் கூறியதை உள்ளூர் ஊடகம் (RTHK) தெரிவித்துள்ளது.

கட்டடத்தின் அருகில் இருந்த கடையில் மூன்று பெரியோர்களும் ஒரு குழந்தையும் உதவிக்கு காத்திருந்ததாகவும் மூன்று ஆடவர்கள் மின்தூக்கியில் சிக்கியிருந்ததாகவும் காவல்துறைக்கு தகவல் வந்திருப்பதாக செய்தி ஊடங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்