தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மெல்பர்ன் யூத ஆலயத்தில் தீ; தேடப்படும் சந்தேகப் பேர்வழிகள்

2 mins read
9d626320-18ae-4f17-80bb-d66b8914b43a
மெல்பர்ன், ரிப்போன்லியா நகரில் உள்ள யூத ஆலயத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ, 40 நிமிட போராட்டத்துக்குப் பின்னர் அணைக்கப்பட்டது. - படம்: ஏஎஃப்பி

சிட்னி: ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் யூத வழிபாட்டுத் தலத்தில் வேண்டுமென்றே தீ மூட்டிய[Ϟ]தாகச் சந்தேகிக்கப்படும் இருவரைத் தேடி வருவதாக ஆஸ்திரேலிய காவல்துறை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) தெரிவித்தது.

மெல்பர்ன், ரிப்போன்லியா நகரின் தென்கிழக்கில் உள்ள அந்த இடத்தில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.10 மணி அளவில் ஏற்பட்ட தீயை அணைக்க கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் ஆனது.

யூதர்களுக்கு எதிரான உணர்விற்கு ஆஸ்திரேலியாவில் இடமில்லை என்று அந்நாட்டுப் பிரதமர் ஆண்­டனி அல்­ப­னிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“வழிபாட்டுத் தலத்தில் நடத்தப்பட்டுள்ள இந்த வன்முறையும் மிரட்டலும் ஏற்படுத்தப்பட்ட அழிவும் மூர்க்கத்தனமானது. இந்தத் தாக்குதல் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சமூகத்தில் அச்சத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது,” என்று அவர் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

விசாரணையில் விக்டோரியா மாநில காவல்துறையுடன், பயங்கரவாதத் தடுப்பு காவல் துறையும் ஈடுபடும் என்று திரு அல்பனிஸ் கூறினார்.

“இது வேண்டுமென்றே செய்யப்பட்டது, குறி வைக்கப்பட்டது என்று நம்புகிறோம். காரணத்தை கண்டறிவோம்,” என்று புலனாய்வுத் துறை ஆய்வாளர் கிறிஸ் முர்ரே செய்தியாளர்களிடம் கூறினார்.

அந்த வழிபாட்டிடம், யூத இன அழிப்பில் உயிர்பிழைத்தவர்களால் 1960களில் கட்டப்பட்டது

“கதவு தட்டப்படும் சத்தம் கேட்டதையடுத்து, ஏதோ திரவம் உள்ளே வீசப்பட்டு பற்றி எரிந்தது. உள்ளே இருந்த சிலர் பின் கதவு வழியாக வெளியே ஓடினார்கள். ஒருவருக்கு தீக்காயம் ஏற்பட்டது,” என்று வழிபாட்டுத் தல குழு உறுப்பினர் பெஞ்சமின் க்ளீன் ஆஸ்திரேலிய ஒளிபரப்பு நிறுவனத்திடம் தெரிவித்தார்.

“முழு இடமும் மிக விரைவாக எரிந்தது,” என்று அச்செய்தி குறிப்பிட்டது.

ஆலயத்தில் காலைப் பிரார்த்தனைக்கு வந்த ஒரு வழிபாட்டாளர், தீ வைப்பதற்கு முன், கட்டடத்துக்குள் தீப் பற்றக்கூடிய பொருளை இருவர் எல்லா இடங்களிலும் பரப்புவதை பார்த்துள்ளார் என்று விக்டோரியா மாநில காவல்துறை கூறியது.

குறிப்புச் சொற்கள்