பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் உள்ள புயெங் கும் பகுதியின் படாபிகொர்ன் சந்தையில் உள்ள துணிக்கடைகளில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
அதனை ஐந்து தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள் 12 நிமிடங்களில் சம்பவ இடத்தை வந்தடைந்து அணைத்துவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. அது உள்ளூர் நேரப்படி காலை 6.27 மணிக்கு அணைக்கப்பட்டது என்று பேங்காக் ராமா 199 வானொலி நிலையமும் உறுதிப்படுத்தியது.
படாவிகொர்ன் சந்தை நவாமின் ரோட்டில் உள்ளது. அங்கு பயன்படுத்தப்பட்ட பல பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அங்கிருந்த கடைகளில் வைக்கப்பட்ட துணிகளும் இதர பொருள்களும் தீ விரைவாகப் பரவுவதற்கு காரணமாகின.
பேரிடர் மீட்புக்கான தொண்டூழியர்களும் குழுக்களும் அருகில் இருந்த பெரிய தண்ணீர் தொட்டிகளை எடுத்துவர உதவினர். அந்த நேரத்தில் தீயணைப்பு வீரர்கள், தீ மற்ற கடைகளுக்குள்ளும் பொதுச் சொத்துகளிலும் பரவாமல் போராடினர்.
புயெங் கும் மாவட்ட அதிகாரிகள், சந்தையின் அருகே உள்ள பெட்ரோல் நிலையத்தில் தீயினால் பாதிக்கப்பட்டோருக்குப் பதிவகத்தை ஏற்படுத்தினர். தீயில் காயமடைந்தோர் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.
