மாஸ்கோ: ரஷ்யாவின் ஃபார் ஈஸ்ட் பகுதியில் உள்ள எரிவாயு ரசாயன வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 19 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
தீ விபத்தில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததுடன் ஒருவர் மாண்டார். அவர் சீனாவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.
தீவிரச் சிகிச்சைக்குப் பிறகும் சீனாவைச் சேர்ந்த ஊழியரைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் அவரது குடும்பத்துக்கு நிதியாதரவு போன்றவை வழங்கப்படும் என்றும் ஆமூர் வட்டாரத்தில் உள்ள எரிவாயு ரசாயன நிறுவனம் தெரிவித்தது.
உலகின் ஆகப் பெரிய பாலியிதைலீன், பால்புரோபைலின் உற்பத்தியாளர் என்று தன்னையே கூறிக்கொள்ளும் ரஷ்ய நிறுவனமான சிபூர், சீன எண்ணெய், எரிவாயு நிறுவனமான சைனொபெக் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டது. அது செயல்பாடுகளை இன்னும் தொடங்கவில்லை.
மிகப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து மலிவான விலையில் வெளிநாட்டு ஊழியர்களை ரஷ்யா பணியமர்த்தும் என்று பரவலாகக் கூறப்படுகிறது.
வளாகத்தில் எரிந்த தீயை அணைக்க தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


