சீனாவில் உடற்பயிற்சிக்கூடம் இடிந்து விழுந்து மூவர் மரணம்

சீனாவில் உடற்பயிற்சிக்கூடம் இடிந்து விழுந்து மூவர் மரணம்

படம்: வெய்போ

07 Nov 2023 - 6:17 pm

1 mins read

பெய்ஜிங்: சீனாவின் வடகிழக்கு மாநிலமான ஹெய்லாங் ஜியாங்கில் உள்ள உடற்பயிற்சிக்கூடம் ஒன்று திங்கட்கிழமை இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் மூவர் உயிரிழந்ததாகவும் ஒருவர் காயமடைந்ததாகவும் அம்மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹுவானன் கவுண்டியில் உள்ள ஜியாமுசி நகரில் இருக்கும் யுசெங் உடற்பயிற்சிக்கூடம் இடிந்துவிழுந்தபோது அதனுள்ளே ஏழு பேர் இருந்தனர் என அதிகாரிகள் கூறினர்.

மீட்புப் பணிகள் முடிவடைந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரவு 7.20 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் உயிரிழந்த மூன்று பேரும் குழந்தைகளாக இருக்கலாம் என முதற்கட்ட அறிக்கை தெரிவிப்பதாக அந்நாட்டு அரசு ஊடகம் கூறியது.

குறிப்புச் சொற்கள்
சீனாவிபத்து