தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவில் குழந்தை பாலியல் வதை கும்பலிடமிருந்து ஐந்து குழந்தைகள் மீட்பு

2 mins read
ddec02dd-40b6-48a7-8e78-4cef7cdf2846
ஜோகூர் காவல்துறைத் தலைமை அதிகாரி எம். குமார். - படம்: ஊடகம்

ஜோகூர் பாரு: சிறார் மீதான பாலியல் நாட்டம் கொண்ட கும்பலிடமிருந்து ஐந்து குழந்தைகளை ஜோகூர் காவல்துறை மீட்டுள்ளது. அவர்களில் இருவர் இரு மாதக் குழந்தைகள்.

பாலியல் வதை செய்து அதனைப் புகைப்படங்களாகவும் காணொளிப் படங்களாகவும் எடுக்க குழந்தைகளை அந்தக் கும்பல் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.

மீட்கப்பட்ட குழந்தைகள் இரு மாதம் முதல் ஐந்து வயது வரையிலானவர்கள் என்று தெரிவித்த புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் எம். குமார், அந்தக் குழந்தைகள் சமூக ஊடகங்கள் வாயிலாக அக்கும்பலிடம் விற்கப்பட்டிருக்கலாம் என்றார்.

குழந்தைகளிடம் பாலியல் கொடுமையை கும்பல் நிகழ்த்தும் விதம் குறித்து இன்று (ஆகஸ்ட் 29) ஜோகூர் காவல்துறை தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் திரு எம். குமார் விவரித்தார்.

“கர்ப்பிணிப் பெண்களை நாடும் கும்பல், பிறக்கும் குழந்தைகளைத் தத்து எடுக்க விரும்புவதாகக் கூறி, அதற்காக 1,500 ரிங்கிட் முதல் 3,500 ரிங்கிட் வரை (S$460 முதல் S$1,070 வரை) பணம் கொடுக்கும்.

“அவர்களின் பிரசவச் செலவுகளையும் அந்தக் கும்பலே ஏற்றுக்கொள்ளும்.

“பின்னர், குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழை தேசிய பதிவுத்துறையிடம் பெறுவதற்கான முயற்சிகளில் அக்கும்பல் ஈடுபடும்.

“தாய்மார்களிடம் இருந்து குழந்தைகளை வாங்கிச் செல்லும் கும்பல் அந்தக் குழந்தைகளை பாலியல் வதைசெய்யும்.

“அதனை புகைப்படங்களாகவும் காணொளிப் படங்களாகவும் எடுத்து சட்டவிரோத மர்ம இணையத்தளத்திலும் ஒரு டெலிகிராம் குழுவிலும் அவற்றை அந்தக் கும்பல் பதிவேற்றும்.

“அந்தத் தளங்களில் அவற்றைப் பார்க்க உலகம் முழுவதும் ஏராளமானோர் பணம் கட்டிச் சேர்ந்துள்ளனர்,” என்றார் திரு குமார்.

ஜோகூர் பாருவில் 29 வயது தொழில்நுட்பர் ஒருவர் கைது செய்யப்பட்ட பின்னர் அவர் அளித்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து ஒரு மாத காலம் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

“ஜூலை 19ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சிறார் பாலியல் வதைக் கும்பலைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

“ஜோகூர் பாரு, சிலாங்கூர், பினாங்கு ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் பிடிபட்டனர்.

“அந்த பத்துப் பேரில் இருவர் மட்டுமே மலேசியர்கள், மற்றவர்கள் வெளிநாட்டினர். அவர்கள் அனைவரும் 25க்கும் 60க்கும் இடைப்பட்ட வயதினர். அவர்களில் சிலர் குழந்தை பராமரிப்பாளர்கள் என்று நம்பப்படுகிறது,” என்றும் திரு குமார் விவரித்தார்.

குறிப்புச் சொற்கள்