மலாக்கா முன்னாள் முதல்வரின் முன்னாள் அரசியல் செயலாளருக்கு ஐந்து நாள் தடுப்புக் காவல்

மலாக்கா முன்னாள் முதல்வரின் முன்னாள் அரசியல் செயலாளருக்கு ஐந்து நாள் தடுப்புக் காவல்

1 mins read
49bee96a-ff6f-4597-b5b7-ec5cc10e8ccd
‘டத்தோ வீரா’ பட்டத்தை வைத்திருக்கும் சந்தேக நபர், பிப்ரவரி மற்றும் நவம்பர் 2021க்கு இடையில் இந்தக் குற்றத்தைச் செய்ததாக நம்பப்படுகிறது - படம்: மக்கள் ஓசை

மலாக்கா: மலாக்கா முன்னாள் முதல்வரின் முன்னாள் அரசியல் செயலாளர், ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைகளில் உதவுவதற்காக பிப்ரவரி 12ஆம் தேதி முதல் ஐந்து நாள்களுக்கு, அவரது மனைவியுடன் சேர்த்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

புதன்கிழமை (பிப்ரவரி 11) பிற்பகல் 2 மணியளவில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய தலைமையகத்தில் கைது செய்யப்பட்ட கணவன்-மனைவிக்கு நீதிபதி எஸ்ரீன் ஜக்காரியா, தடுப்புக் காவல் உத்தரவைப் பிறப்பித்தார்.

மலாக்காவில் கடல் மீட்புத் திட்டத்திற்கான சலுகை வழங்குநராக ஒரு நிறுவனத்தை நியமிக்க உதவுவதற்காக அவர்கள் ஏறக்குறைய 3 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் கேட்டுப் பெற்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

‘டத்தோ வீரா’ பட்டத்தை வைத்திருக்கும் சந்தேக நபர், பிப்ரவரி மற்றும் நவம்பர் 2021க்கு இடையில் இந்தக் குற்றத்தைச் செய்ததாக நம்பப்படுகிறது. கிள்ளான் பள்ளத்தாக்கில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்க லஞ்சப் பணம் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது என்பதும் தெரியவந்தது.

குறிப்புச் சொற்கள்