ஜப்பான்: ஹொக்கைடோவில் பனிச்சறுக்கு வார் ஒன்றில் வலது கை சிக்கியதில் ஐந்து வயது சிறுவன் உயிரிழந்தான். ஒட்டாரு என்ற இடத்தில் விபத்து நேர்ந்தது.
உல்லாசத் தலம் ஒன்றில் உள்ள பனிச்சறுக்கு மின்தூக்கியில் மகனின் கை சிக்கிக்கொண்டதாகப் பெண் ஒருவரிடமிருந்து உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் தீயணைப்பாளர்களுக்கு அழைப்புவந்தது.
பனிச்சறுக்கின் கன்வேயர் வாரில் சிறுவனின் கை சிக்கிக்கொண்டது.
மின்தூக்கியிலிருந்து வெளியேற முயன்ற சிறுவன் தவறி விழுந்ததாக அதிகாரிகள் கூறினர். அந்த மின்தூக்கியில் கைப்பிடிகளும் கிடையாது.
எனினும் விபத்துக்குப் பிறகு பனிச்சறுக்குத் தலம் மூடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

