சிட்னியில் இருந்து லண்டனுக்குச் செல்ல 2 மணி நேரம்தானா !

சிட்னியில் இருந்து லண்டனுக்குச் செல்ல 2 மணி நேரம்தானா !

1 mins read
53d8be5c-e14f-4092-b3a3-462609c035f0
படம்: ராய்ட்டர்ஸ் -

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து இங்கிலாந்தின் லண்டன் நகருக்கு விமானம் மூலம் 2 மணி நேரத்தில் பயணம் செய்யலாம்.

இன்னும் பத்து ஆண்டுகளில் அது சாத்தியமாகும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ஆனால் அந்த பயணத்திட்டத்தில் ஒரு சிக்கல் உள்ளது. விமானப் பயணம் விண்வெளி வாயிலாக இருக்கும்.

பயணி முதலில் விண்வெளிக்கு செல்வார் அதன் பின்னர் அவர் செல்ல வேண்டிய ஊருக்கு கொண்டு செல்லப்படுவார். அதன் மூலம் கிட்டத்தட்ட 22 மணி நேர விமானப் பயணம் 2 மணி நேரத்தில் சாத்தியமாகும்.

இந்த ஆய்வுத் திட்டத்திற்கான செலவுக்கு பிரிட்டனின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் ஆதரவு தருகிறது.

தற்போதைய நிலவரப்படி விண்வெளிக்கு சென்று வரும் விமானங்களை விர்ஜின் கெலாக்டிக் மற்றும் புளூ ஓரிஜின் வழங்குகின்றன.

ஒரு பயணச்சீட்டின் விலை 585,500 வெள்ளி.

ஆனால் வருங்காலத்தில் ஆய்வின் உதவியாலும் தொழில்நுட்ப வளர்ச்சியாலும் அவ்வகை விமானச்சீட்டுகளின் விலை குறையும் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்