வாஷிங்டன்: ஈரான், கிட்டத்தட்ட ஐந்து மணிநேரத்துக்குப் பிறகு அதன் ஆகாயவெளியை மீண்டும் அனைத்துலக விமானங்களுக்குத் திறந்துள்ளது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ராணுவத் தாக்குதல் இடம்பெறக்கூடும் என்ற அச்சத்தில் ஈரான் அதன் ஆகாயவெளியை மூடியிருந்தது.
ஈரான், அனைத்துலக விமானங்களைத் தவிர பிற விமானங்களுக்குத் தனது ஆகாயவெளிக்குள் வர ஜனவரி 14ஆம் தேதி உள்ளூர் நேரப்படி மாலை 5.15 மணியளவில் தடை விதித்திருந்ததாக மத்திய விமானத் துறை நிர்வாக இணையத்தளம் குறிப்பிட்டது.
உள்ளூர் நேரப்படி இரவு 10 மணியளவில் அந்தத் தடை நீக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து ஈரானிலிருந்து ஐந்து உள்ளூர் விமான நிறுவனங்கள் அவற்றின் சேவைகளை மீண்டும் தொடங்கின.
அமெரிக்கா, ஈரான்மீது தாக்குதல் தொடுத்தால், ஈரான், அமெரிக்க ராணுவத் தளங்கள்மீது தாக்குதல் நடத்தும் என்று மூத்த ஈரானிய அதிகாரி ஒருவர் கூறியதை அடுத்து மத்தியக் கிழக்கிலிருந்து அமெரிக்கா தனது வீரர்கள் சிலரை மீட்டுக்கொண்டது.
சண்டை நிலவும் பகுதிகளில் ஏவுகணைத் தளங்களும் ஆளில்லா வானூர்தித் தளங்களும் அதிகரித்துவருவது விமானப் போக்குவரத்து மிகப் பெரிய அச்சுறுத்தல் என்றது ஈரான்.
இந்தியாவின் ஆகப் பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, ஈரானின் புதிய தடையால் அதன் அனைத்துலக விமானச் சேவைகள் பாதிக்கப்படும் என்று கூறியது.
டெஹ்ரானுக்குச் சென்ற ரஷ்யாவின் ஏரோஃப்லோட் விமானம் மாஸ்கோவிற்குத் திரும்பியது.
ஜனவரி 14ஆம் தேதி, ஈரானின் ஆகாயவெளிப் பகுதிக்குள் நுழைவது குறித்து நாட்டின் விமான நிறுவனங்களுக்குப் புதிய எச்சரிக்கை விடுத்தது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், ஈரான் வழியாகப் பறந்துசெல்ல அனைத்து விமானங்களுக்கும் அமெரிக்கா தடைவிதித்திருந்தது.
ஃபிலைதுபாய், டர்கிஷ் ஏர்லைன்ஸ் ஆகியவை ஈரானுக்கான பல சேவைகளைக் கடந்த வாரம் ரத்துசெய்தன.

