ஜகார்த்தா: இந்தோனீசியத் தலைநகரில் 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் சிங்கப்பூரின் ‘லாவ் பா சாட்’ஐப் போன்ற உணவு நிலையம் ஒன்று கட்டப்படவுள்ளது.
அதில் வெவ்வேறு வட்டார உணவு வகைகளும் திறந்தவெளி ‘சாத்தே சாலை’யும் அமைந்திருக்கும்.
சொத்து மேம்பாட்டு நிறுவனமான ‘அகுங் செடாயு’ குழுமம், ‘பந்தாய் இண்டா கப்பூக்’ பகுதியில் அந்த உணவு நிலையத்தைக் கட்டவுள்ளது.
செந்தோசாவின் பரப்பளவைவிட எட்டு மடங்கு அதிகம் உள்ள ‘பந்தாய் இண்டா கப்பூக்’ பகுதி, ஜகார்த்தாவின் வட பகுதியில் அமைந்துள்ளது.
உள்ளூரிலேயே தனித்துவமான, சிறப்பான ஓர் இடத்தில் உணவருந்துவதற்கான அனுபவத்தை புதிய உணவு நிலையம் தமது நாட்டு மக்களுக்குக் கொடுக்கும் என்று சிங்கப்பூரில் வளர்ந்த ‘அகுங் செடாயு’ குழுமத்தின் தலைமை நிர்வாகி ஸ்டீவன் குசுமொ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
“உலகையே இந்தோனீசியாவிற்குக் கொண்டுவர முயற்சி செய்கிறோம்,” என்றார் அவர்.

