முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் அரசியல் துறவறம்

முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் அரசியல் துறவறம்

1 mins read
37273b3b-062b-42ea-8992-9cc7eda735e4
அரசியல் வாழ்க்கையிலிருந்து விலகும் முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், தம் குடும்பத்துடன் கூடுதல் நேரம் செலவழிக்க விரும்புவதாகக் கூறினார். - படம்: ஸ்காட் மோரிசன்/ஃபேஸ்புக்

கேன்பரா: ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன் வரும் பிப்ரவரி மாதம் அரசியல் வாழ்க்கையிலிருந்து ஓய்வுபெறவிருப்பதாக அறிவித்துள்ளார்.

அனைத்துலக பெருநிறுவனத் துறையில் புதிய பொறுப்புகளை ஏற்கவும் தம் குடும்பத்துடன் கூடுதல் நேரம் செலவழிக்கவும் இம்முடிவைத் தாம் எடுத்துள்ளதாக ஜனவரி 23ஆம் தேதியன்று வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் 55 வயது மோரிசன் குறிப்பிட்டார்.

ஆஸ்திரேலியாவை மேலும் வலுவான, பாதுகாப்புமிக்க, செழிப்பான ஒரு நாடாக மாற்ற நாட்டின் ஆக உயரிய நிலையில் சேவையாற்றும் வாய்ப்பைத் தமக்குத் தந்ததற்காக திரு மோரிசன், குடும்பத்தினர், நண்பர்கள், வாக்காளர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டு தேர்தலில் தொழிற்கட்சியின் ஆண்டனி அல்பனிஸ் வெற்றிபெற்றதை அடுத்து அரசியலில் திரு மோரிசனின் எதிர்காலம் குறித்துப் பல ஊகங்கள் எழுந்தன.

குறிப்புச் சொற்கள்