பங்ளாதேஷின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் எம்.பி.யுமான மஷ்ரஃபே மோர்டசாவின் வீட்டுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீவைத்தனர்.
பங்ளாதேஷில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக உருவெடுத்ததால், அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசினா பதவி விலகிவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பங்ளாதேஷில் ஆர்ப்பாட்டக்காரர்கள் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 5) ஷேக் ஹசினாவின் மாளிகையைச் சூறையாடினர். மேலும், ஆளும் அவாமி லீக் கட்சிக்கு சொந்தமான அலுவலகங்களையும் அவர்கள் சூறையாடினர்.
தொடர்ந்து நரைல்-2 தொகுதி அவாமி லீக் கட்சியின் எம்.பி.யும் பங்ளாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான மஷ்ரஃப் மோர்டாசா வீட்டுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீவைத்ததால், பதற்றம் நிலவியது.
இதுபோக, சில இந்துக் கோயில்களையும் போராட்டக்காரர்கள் சூறையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.