பெட்டாலிங் ஜெயா: ஹரிமாவ் மலாயா காற்பந்துக் குழுவின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் சத்தியநாதன் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 65.
அவரது இழப்பு மலேசியக் காற்பந்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியைத் தந்துள்ளது.
திரு சத்தியநாதன் அர்ப்பணிப்புக் குணம் படைத்த பயிற்றுவிப்பாளர் என்றும் காற்பந்து விளையாட்டின் மேம்பாட்டுக்காகக் குரல் கொடுக்கும் துணிச்சல்மிக்கவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அவரது விளையாட்டாளர்களின் நலனை எப்போதுமே கவனித்துக்கொண்டவர், திரு சத்தியநாதன். காற்பந்து விளையாட்டில் இனவாதம் நடப்பதற்கு எதிராகவும் அவர் குரல் கொடுத்தார்.
1992ஆம் ஆண்டில் நெகிரி செம்பிலான் குழுவின் பயிற்றுவிப்பாளராக காற்பந்து உலகில் அடியெடுத்து வைத்தார், திரு சத்தியநாதன்.
அவர் 23 வயதுக்குக் கீழ் உள்ள தேசிய காற்பந்துக் குழு விளையாட்டாளர்களுக்கும் பயிற்றுவித்தார். 2007ஆம் ஆண்டில் அக்குழு மெர்டேக்கா போட்டியில் வெற்றிகண்டது.
அதன் பிறகு 2007 முதல் 2009 வரை, அவர் ஹரிமாவ் மலாயா குழுவின் பயிற்றுவிப்பாளராகச் செயல்பட்டார்.
அவர் கடைசியாக சென்ற ஆண்டு சரவாக் யுனைட்டட் குழுவின் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றினார்.
தொடர்புடைய செய்திகள்
அதன் பிறகு, அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் நான்கு மாதக் கால விடுப்பு எடுத்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.