முன்னாள் போப்பாண்டவரான 16வது பெனடிக்ட் காலமானார். அவருக்கு 95 வயது. இவருக்கு முன்பு கடந்த 600 ஆண்டுகளில் போப்பாண்டவர்களாக இருந்த அனைவரும் பதவியில் இருந்தபோதே மாண்டனர்.
அவர்கள் யாரும் பதவி விலகவில்லை. கடந்த 600 ஆண்டுகளில் இவர்தான் பதவி விலகிய முதல் போப்பாண்டவர். ஜெர்மனியைச் சேர்ந்த இவரின் இயற்பெயர் ஜோசஃப் ரெட்ஸிங்கர்.
2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதவி விலகியதிலிருந்து அவர் வத்திக்கன் நகரில் வசித்து வந்தார்.