மலேசியாவில் காரிலிருந்து வாணவேடிக்கை விட்டதாக நம்பப்படும் நால்வர் கைது

மலேசியாவில் காரிலிருந்து வாணவேடிக்கை விட்டதாக நம்பப்படும் நால்வர் கைது

1 mins read
e1292b80-c796-4522-ae9f-b487ed0da256
சம்பவம் பதிவான காணொளியில் இடம்பெறும் காட்சி. - படம்: ஃபேஸ்புக்
Google News Preferred Icon

ஷா ஆலம்: மலேசியாவில் ஓடும் காரிலிருந்து வாணவேடிக்கை விட்டதாக நம்பப்படும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

21லிருந்து 28 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மூவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக ‌ஷா ஆலம் காவல்துறை அதிகாரி ராம்சே எம்போல் தெரிவித்தார். ‌ஷா ஆலம், சுங்கை புலோ பகுதிகளில் சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

“ஒரு கார், ஒரு கைப்பேசி, ஒரு வாணவேடிக்கை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

“மேல் விசாரணைக்காக சந்தேகப் பேர்வழிகள் மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.

புக்கிட் ஜெலுத்தோங் பகுதியில் ஓடும் காரிலிருந்து ஆடவர் ஒருவர் வாணவேடிக்கை விட்ட காணொளிப் பதிவு இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாவாணவேடிக்கைகைது