தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மிச்சிகன் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு, தீ; நால்வர் பலி

2 mins read
e353816c-cac5-4704-b4d3-8f04b7655ed8
துப்பாக்கிச்சூடு சம்பவம் கிராண்ட் பிளான்க் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (செப்டமர் 28) நடந்தது. - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

மிச்சிகன்: அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள மோர்மன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலில் எட்டுப் பேர் காயமுற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. அதில் ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவம் கிராண்ட் பிளான்க் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (செப்டமர் 28) நடந்தது.

“தாக்குதல் நடத்தியவர் தேவாலயத்திற்குள் வாகனத்தைச் புகுத்தினார், பின்னர் அவர் தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்தவர்களைச் சுட்டார்,” என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

துப்பாகி மூலம் தாக்குதல் நடத்திய பிறகு அந்த ஆடவர் தேவாலயத்திற்குத் தீயும் வைத்துள்ளார்.

“தாக்குதல் தொடர்பாக அவசர உதவி எண்ணுக்கு அழைப்பு வந்தது, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உடனடியாகத் தாக்குதல் நடத்தியவரை அடையாளம் கண்டு கொன்றனர்,” என்று காவல்துறை தெரிவித்தது.

அவசர உதவி எண்ணுக்கு அழைப்பு வந்த எட்டாவது நிமிடத்தில்

தாக்குதல் நடத்தியவர் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த நபரின் பெயர் தாமஸ் ஜேக்கப் சான்ஃபர்ட், அவருக்கு 40 வயது.

தாக்குதல் நடத்தியவரின் மேல் விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. இருப்பினும் தாக்குதல் நடத்தியவர் முன்னாள் ராணுவ வீரர் என்று அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.

இதற்கிடையே தாக்குதலால் பாதிக்கப்பட்ட தேவாலயம் தொடர்பான படங்கள் வெளியாகியுள்ளன. அதில் பாதிக்கும் மேற்பட்ட தேவாலயக் கட்டடம் தீயில் கருகிய நிலையில் இருந்தது.

தாக்குதல் நடத்திய ஆடவர் கனரக டிரக் வாகனத்தைப் புகுத்தியதைப் படங்களில் பார்க்க முடிந்தது.

தாக்குதல் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்