சிரம்பானில் பலவாகன விபத்து: நால்வர் காயம்

1 mins read
2ce6a3e5-c0ca-46fe-818e-db1e7478826e
விபத்தில் நால்வர் கடுமையாகக் காயமடைந்துள்ளனர்.  - படம்: தி ஸ்டார்

சிரம்பான்: மலேசியாவின் சிரம்பான் மாநிலத்தில் உள்ள மிடல் ரிங் ரோடுக்கு அருகில், கற்கள் ஏந்திய இரண்டு லாரிகள் உட்பட ஒன்பது வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து ஏற்பட்டுள்ளது.

அதில் நால்வர் கடுமையாகக் காயமடைந்துள்ளனர். விபத்து பிற்பகல் 1.30 மணிவாக்கில் நடந்ததாகவும் மீட்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தீயணைப்பு, மீட்புத் துறைப் பேச்சாளர் கூறினார்.

“இரண்டு ‘எஸ்யுவி’ உட்பட ஏழு கார்களும் இரண்டு லாரிகளும் விபத்தில் சம்பந்தப்பட்டன. அந்த நால்வரும் ஒரு காரில் சிக்கிக்கொண்டனர்,” என்று அவர் சொன்னார்.

ஜாலான் சிரம்பான் - தம்பின் பகுதியில் நடந்த விபத்து குறித்த காணொளிகளும் படங்களும் சமூக ஊடகத்தில் வலம்வருகின்றன.

லாரி ஒன்று சரிந்து விழுந்து, அதிலிருந்து பொருள்கள் அனைத்தும் சாலையில் சிதறிக்கிடந்தைக் காணமுடிந்தது.

காயமடைந்த நால்வரும் சிக்கியிருந்த கார் முற்றிலும் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்