பிரான்சில் பால்வினை நோய்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இலவசமாக ஆணுறைகள் வழங்குவதாக அந்நாட்டின் அதிபர் இமானுவெல் மெக்ரோன் அறிவித்துள்ளார்.
பிரான்சில் உண்டாகும் தேவையற்ற கர்ப்பங்களைத் தடுக்கவும், பால்வினை நோய்களைத் தவிர்க்கவும் 18 முதல் 25 வயதுள்ளவர்களுக்கு ஆணுறைகள் இலவசமாக கிடைக்க வழங்கப்படவுள்ளன.
பிரான்சில் 2020, 2021ஆம் ஆண்டுகளில் பால்வினை நோய்களின் எண்ணிக்கை 30 விழுக்காடாக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வரும் புத்தாண்டில் இருந்து 18 முதல் 25 வயதுள்ளவர்களுக்கு மருந்தகங்களில் ஆணுறைகள் இலவசமாகக் கிடைக்கும்.
இதுகுறித்த சமூக ஊடக விவாதம் ஒன்றிற்குப் பதிலளித்த திரு மெக்ரோன், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் பால்வினை நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
மெக்ரோன் 2017ல் பிரான்சின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, பால்வினை நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக உறுதி அளித்திருந்தார்.