பேராக்கில் நோன்புப் பெருநாள் உணவுத் தயாரிப்பில் மோசடிகள் அதிகரிப்பு

பேராக்கில் நோன்புப் பெருநாள் உணவுத் தயாரிப்பில் மோசடிகள் அதிகரிப்பு

1 mins read
b82f01a1-93aa-4799-9312-42be5b5e6dc4
பேராக்கில் இவ்வாண்டில் மட்டும் பண்டிகை கால உணவுத் தயாரிப்பு மோசடிகளில் 97,900 வெள்ளிக்குமேல் (300,000 மலேசிய ரிங்கிட்) இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

கோபெங்: பண்டிகைக் கால உணவு ‘ஆர்டர்கள்’ தொடர்பில் அதிகரித்துவரும் மோசடிகள் குறித்து உணவு வழங்குநர்களும் இனிப்புத் தயாரிப்பாளர்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பேராக் மாநிலக் காவல்துறை எச்சரித்துள்ளது.

இவ்வாண்டில் மட்டும் அத்தகைய மோசடிகளால் 97,900 வெள்ளிக்குமேல் (300,000 மலேசிய ரிங்கிட்) இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

நோன்புப் பெருநாளுக்கான பலகாரங்களையும் உணவு வகைகளையும் மொத்தமாக ‘ஆர்டர்’ செய்யும் வாடிக்கையாளர்களைப் போல நடித்து மோசடிப்பேர்வழிகள் உணவு வழங்குநர்களை ஏமாற்றி வருவதாகப் பேராக் மாநில காவல்துறைத் தலைவர் நூர் ஹிஷாம் நோர்டின் கூறினார்.

செவ்வாய்க்கிழமை (மார்ச் 17), கோபெங் ஊரக மாற்றத்திற்கான மையத்தில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு சாலைப் பாதுகாப்பை உறுதிசெய்யவும் வீடுகளில் நடக்கும் திருட்டைத் தடுக்கவும் மேற்கொள்ளப்படும் சிறப்பு நடவடிக்கையின் (OPS Selamat 26) தொடக்க விழாவில் அவர் கலந்துகொண்டார்.

அப்போது பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஉணவுநோன்புப் பெருநாள்