ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸ், ஜப்பான் நாடுகளின் கப்பல்கள்

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸ், ஜப்பான் நாடுகளின் கப்பல்கள்

1 mins read
af89e4ff-da3b-4ceb-857f-374e346d15f9
ஹோர்முஸ் நீரிணையில் அண்மையில் காணப்பட்ட வர்த்தகக் கப்பல். - கோப்புப் படம்
multi-img1 of 2

தோக்கியோ/ஓஸ்லோ: ஈரானை அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்கியதிலிருந்து ஹோர்முஸ் நீரிணையை வர்த்தகக் கப்பல்கள் பாதுகாப்பாகக் கடப்பது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

அமெரிக்காவுக்கு ஆதரவாகவும் தனக்கு எதிராகவும் செயல்படும் நாடுகளின் கப்பல்களைத் தாக்கப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.

இந்தப் பதற்றமான சூழலில் பிரான்ஸ், ஜப்பான் நாடுகளுக்குச் சொந்தமான கப்பல்கள் போர் தொடங்கிய நாளில் இருந்து முதன்முறையாக ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து சென்றுள்ளன.

அதற்கு விதிமுறைகளுடன் அனுமதியளித்து ஈரான், முன்பதிவுக் கட்டணங்கள், வரிகள் போன்றவற்றை வசூலித்திருப்பது மற்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

பிரான்ஸ், ஜப்பான் இருநாடுகளும் சண்டை நிறுத்தப்பட்டு, நீரிணை மீண்டும் வர்த்தகத்துக்குத் திறக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

குறிப்புச் சொற்கள்