அமெரிக்கத் தடைகளால் கியூபாவில் எரிபொருள் தட்டுப்பாடு

அமெரிக்கத் தடைகளால் கியூபாவில் எரிபொருள் தட்டுப்பாடு

1 mins read
ஏற்கெனவே மருத்துவத் துறை, உணவு தட்டுப்பாட்டுடன் எரிபொருளும் தீர்ந்ததால் மக்கள் அவதி
9b52d3db-185f-4656-af75-74f8f2fbda5e
கியூபாவின் தலைநகர் ஹவானாவில் எரிவாயு மையத்தைக் கடந்து செல்லும் வாகனம். - படம்: ராய்ட்டர்ஸ்

ஹவானா: எரிபொருள், எண்ணெய், டீசல் ஆகியன கியூபாவில் முற்றிலும் தீர்ந்துவிட்டதாக அந்நாட்டு எரிசக்தி, சுரங்கத் துறை அமைச்சர் புதன்கிழமை (மே 13) அறிவித்தார்.

அமெரிக்கா கியூபாமீது விதித்த பொருளியல் தடையின் விளைவால் அத்தீவில் இது நடந்துள்ளது.

“எங்களிடம் எரிவாயு, எண்ணெய், டீசல் அறவே இல்லை. சேமிக்கப்பட்டக் கையிருப்பாக எவ்வித எரிபொருளும் இல்லை,” என்று எரிசக்தி அமைச்சர் விசென்டெ டி லஓ கூறினார். தேசிய மின்வாரியமும் மிக மோசமான நிலையில் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தலைநகர் ஹவானாவில் இவ்வாரம் மின்தடைகள் அதிகரித்தன. ஏறத்தாழ 22 மணிநேரம் பல குடியிருப்புகளில் மின்சார விநியோகம் இல்லை.

ஏற்கெனவே உணவு, எரிபொருள், தட்டுப்பாட்டுடன் தவிக்கும் பொதுமக்களுக்கு மருத்துவத் துறையும் பெரிதும் பாதிப்படைந்துள்ளதால் அவர்கள் அவதியுறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்