எரிபொருள் தட்டுப்பாடு: ஆசிய விமானங்களின் எண்ணிக்கை குறைகிறது

எரிபொருள் தட்டுப்பாடு: ஆசிய விமானங்களின் எண்ணிக்கை குறைகிறது

1 mins read
4a3d887f-99c7-4902-920c-80bc64401600
ஹேர்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டதால் கிட்டத்தட்ட 21 விழுக்காடு எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ளது. - படம்: ஏஎஃப்பி

மத்திய கிழக்கு மோதலால் விமான எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிய நாடுகளில் உள்ள விமான நிறுவனங்கள் விமானப் பயணங்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளன.

அத்துடன், அந்நாடுகளைச் சேர்ந்த விமானங்கள் கூடுதல் எரிபொருளை எடுத்துச் செல்கின்றன. அவசரத் தேவைக்கு எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்படும் இடங்களை அவைக் கூடுதலாகச் சேர்த்து வருகின்றன.

எரிபொருளில் விலை ஏற்றத்தால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள விமானப் போக்குவரத்து துறை தற்போது விநியோச் சிக்கலை எதிர்கொண்டு வருகிறது.

ஹேர்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டதால் கிட்டத்தட்ட 21 விழுக்காடு எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ளது. அதனால், ஆசிய நாடுகளைப் போன்ற நடவடிக்கைகளை ஐரோப்பிய விமான நிறுவனங்களும் கடைப்பிடித்து வருவதாக கடல்துறை தரவு நிறுவனமான கிப்ளர் தெரிவித்துள்ளது.

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து விமான எரிபொருள் விலைகள் இரட்டிப்பாகிவிட்டன. அதனால், சில விமான நிறுவனங்கள் தங்களது சேவைகளைக் குறைத்துவிட்டன.

குறிப்புச் சொற்கள்