தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்க விரைவுச்சாலையில் வெடித்த எரிபொருள் லாரி; ஒருவர் மரணம்

1 mins read
d3a0909b-ba31-481c-9427-e7c853b4cd0a
படம்: NYTIMES -

அமெரிக்க விரைவுச் சாலை ஒன்றில் மிகப்பெரிய வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

கனக்டிகட் மாநிலத்தில் உள்ள இன்டர்ஸ்டேட் 95 என்னும் விரைவுச்சாலையில் எரிபொருள் ஏற்றி சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று பாலத்தில் மோதியது.

விபத்து உள்ளூர் நேரப்படி காலை 11:30 மணிவாக்கில் ஏற்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

வாகனம் பாலத்தில் மோதியதால் அது தீப்பிடித்து வெடித்தது. புகையும் நெருப்பும் விபத்து நடந்த இடத்தில் சூழ ஒருவர் மாண்டார். மேலும் இருவருக்கு காயம் ஏற்பட்டது.

மாண்ட நபர் அந்த வாகனத்தின் ஓட்டுநர் என்று அதிகாரிகள் கூறினர்.

வெடிப்பால் பாலத்தின் சில பகுதிகளிலும் சேதம் ஏற்பட்டுள்ளது. வாகனத்தில் இருந்து கசிந்த எரிபொருள் சில பாலத்திற்கு கீழ் இருந்த தேம்ஸ் நதியிலும் கலந்தது.

நாள் ஒன்றுக்கு 60,000 வாகனங்கள் அப்பாலத்தைக் கடக்கும், அது தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பரிசோதனைகள் முடிந்த பிறகு அது மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுவரை அப்பகுதியை மக்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

வாகனத்தில் எத்தனை லிட்டர் எரிபொருள் இருந்தது என்பது பற்றிய விவரங்கள் தெளிவாகத் தெரியவில்லை.

குறிப்புச் சொற்கள்