3 மணி நேரத்தில் நஜிப்புக்கு 198,000 வெள்ளிக்குமேல் குவிந்த நிதி

3 மணி நேரத்தில் நஜிப்புக்கு 198,000 வெள்ளிக்குமேல் குவிந்த நிதி

படம்: ஏஎஃப்பி

19 Sep 2026 - 4:14 pm

1 mins read

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் முன்னாள்  பிரதமர் நஜிப் ரசாக்கிற்காகத் தொடங்கப்பட்ட ஒற்றுமை நிதி திரட்டு நடவடிக்கை, தொடங்கப்பட்ட முதல் மூன்று மணி நேரத்திற்குள்ளேயே 634,000 ரிங்கிட்டுக்கும் (S$198,000) அதிகமான தொகையைத் திரட்டியுள்ளதாக அம்னோ பொதுச்செயலாளர் அஷ்ராஃப் வஜ்தி துசுகி தெரிவித்தார்.

‘நஜிப் ரசாக் ஒற்றுமை நிதி’ மொத்தம் 634,562.02 ரிங்கிட் திரட்டியுள்ளதாகத் திரு அஷ்ராஃப் கூறினார்.

“10 ரிங்கிட், 50 ரிங்கிட் போன்ற சிறிய தொகைகளைப் பலரும் வழங்கியுள்ளனர்,” என்று சனிக்கிழமை (செப்டம்பர் 19) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை நீடிக்கும் தண்டனைக் காலத்தை வீட்டுக் காவலிலேயே அனுபவிக்க திரு நஜிப் அனுமதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அம்னோ இந்த நிதி திரட்டைத் தொடங்கியது.

50 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தவும் விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்படவும் திரு நஜிப் இணங்கியுள்ள நிலையில், அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
நஜிப் ரசாக்நிதிஅபராதம்காவல்துறை