இருப்பில் உள்ள எண்ணெய்யை விநியோகம் செய்ய ஜி7 ஆலோசனை

இருப்பில் உள்ள எண்ணெய்யை விநியோகம் செய்ய ஜி7 ஆலோசனை

2 mins read
f5a3536c-62b6-4dd1-a495-4db14d2815f3
மத்திய கிழக்குப் பூசலுக்குமுன் $72 டாலருக்கு விற்ற ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் மார்ச் 9ஆம் தேதி நிலவரப்படி $120 டாலருக்கு அதிகரித்தது. - படம்: ஏஎஃப்பி

ஜி7 நாடுகளின் நிதியமைச்சர்கள், இருப்பில் உள்ள எண்ணெய்யை ஒருங்கிணைந்து விநியோகம் செய்வதற்கான சாத்தியங்களைப் பற்றி கலந்துரையாடவிருப்பதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதலால் கச்சா எண்ணெய் விநியோகம் தடைப்பட்டிருப்பதுடன் உலக அளவில் அதன் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

ஜி7 நாடுகளுக்குத் தற்போது தலைமை தாங்கும் பிரான்ஸ் பாரிசில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு அதுகுறித்து கலந்துரையாட அழைப்புவிடுத்துள்ளதாகப் பெயர் குறிப்பிட விரும்பாத சில தகவல் அறிந்த நபர்கள் குறிப்பிட்டனர்.

இருப்பில் உள்ள கச்சா எண்ணெய்யை விநியோகம் செய்வது குறித்து பிரெஞ்சு அரசாங்கம் அறிக்கையில் கூறியுள்ளதாக அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

இருப்பில் உள்ள எண்ணெய்யை விநியோகம் செய்யும் யோசனையை அமெரிக்கா வரவேற்றதாக ஃபைனான்ஷியல் டைம்ஸ் தெரிவித்தது. இருப்பினும் எந்த முடிவும் இன்னும் எட்டப்படவில்லை என்று தகவல் அறிந்த நபர்கள் கூறினர்.

பாரிசில் உள்ள அனைத்துலக எரிசக்தி ஆணையத்துடன் இணைந்து இருப்பில் உள்ள எண்ணெய்யை விநியோகம் செய்யப்படும் என்று மற்றொருவர் சொன்னார்.

இருப்பில் உள்ள எண்ணெய் இதற்குமுன் ஐந்து முறை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் இரண்டு முறை 2022ஆம் ஆண்டு உக்ரேனை ர‌ஷ்யா ஆக்கிரமித்தபோது வழங்கப்பட்டது. அதற்குமுன் லிபியாவில் எண்ணெய் விநியோகம் தடைப்பட்டபோதும் முதல் வளைகுடா போரின்போதும் எண்ணெய் விநியோகம் இடம்பெற்றது.

மத்திய கிழக்குப் பூசலுக்குமுன் 72 டாலருக்கு விற்ற ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் மார்ச் 9ஆம் தேதி நிலவரப்படி 120 டாலருக்கு அதிகரித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் பெர்சிய வளைகுடா எண்ணெய் உற்பத்தியாளர்களின் ஏற்றுமதிகள் முடங்கின.

மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களான ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், ஈராக் ஆகியவை எண்ணெய் தட்டுப்பாட்டால் ஏற்றுமதிகளைக் குறைத்துக்கொண்டன.

சவூதி அரேபியா செங்கடல் வழியாக எண்ணெய்யை அனுப்ப முயற்சி மேற்கொள்கிறது.

இருப்பில் உள்ள எண்ணெய் விநியோகம் செய்யப்படக்கூடும் என்ற ஆறுதல் செய்தியால் ஒரு பீப்பாய் எண்ணெய் 107 டாலருக்குக் குறைந்தது.

குறிப்புச் சொற்கள்