கேரத் செளத்கேட், சாதிக் கான் பிரிட்டிஷ் மன்னரால் கெளரவிப்பு

1 mins read
010b45d5-9d0b-4ec8-94b1-c74fea6eac61
இங்கிலாந்தின் முன்னாள் காற்பந்துப் பயிற்றுவிப்பாளர் கேரத் செளத்கேட் (இடது), லண்டன் மேயர் சாதிக் கான் ஆகியோரை பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் கௌரவித்துள்ளார். - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: பிரிட்டிஷ் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31ஆம் தேதி) பலருக்கும் விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளார்.

இதில், திரைநடிகர்கள் ஸ்டிவன் ஃபிரை, கேரி மல்லிகன் ஆகியோருடன் பிரிட்டனின் அஞ்சல் துறை கட்டமைப்பின் மென்பொருளில் ஏற்பட்ட தவற்றால் மோசடி, திருட்டு குற்றங்கள் சுமத்தப்பட்டு தண்டிக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான துணைத் தலைமை அஞ்சலக அதிகாரிகள், ஊழியர்கள் போன்றோரும் புத்தாண்டில் மன்னரால் கௌரவிக்கப்படுவோர் பட்டியலில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31ஆம் தேதி) இடம்பெற்றனர்.

லண்டன் மேயர் சாதிக் கான், பிரிட்டிஷ் தொலைக்காட்சிப் பிரபலமும் எழுத்தாளருமான ஸ்டிவன் ஃபிரை, முன்னாள் பிரிட்டிஷ் காற்பந்துப் பயிற்சியாளர் கேரத் செளத்கேட் ஆகியோரும் இந்தப் பட்டியலில் அடங்குவர்.

திரு ஃபிரை 1997ஆம் ஆண்டு திரையிடப்பட்ட ஆஸ்கார் வைல்ட் படத்தில் அந்தப் பெயருடைய பிரபலமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அத்துடன், ‘பிளேக்எடர்’ என்ற தொலைக்காட்சி நகைச்சுவைத் தொடரிலும் நடத்துள்ளார். இவை தவிர மனநலம் தொடர்பாக அவர் ஏற்படுத்திய விழிப்புணர்வு, சுற்றுச்சூழலுக்கு ஆற்றிய சேவை, செய்த நன்கொடை போன்றவற்றுக்காகவும் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

திரு ஃபிரை ‘பைபோலார் டிசோர்டர்’ எனப்படும் ஒருவித மனநலக் கோளாறால் அவதிப்படுபவர். அதில், தான் மனஉளைச்சலுடன் பல முறை போராடியது குறித்து வெளிப்படையாகப் பேசி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்