ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கானோர் மின்சாரமின்றித் தவிப்பு

ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கானோர் மின்சாரமின்றித் தவிப்பு

2 mins read
05b2de7a-4ba6-49aa-a07a-8a64ccfc30e7
மார்ச் 19ஆம் தேதி குவீன்ஸ்லாந்து போர்ட் டக்ளசில் மேகம் சூழ்ந்து காணப்பட்டது. - கோப்புப் படம்: இபிஏ

சிட்னி: ஆஸ்திரேலியாவில் திரவ எரிவாயுத் தட்டுப்பாடு தொடரும் வேளையில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) வடமேற்குத் தொலைதூரப் பகுதியில் வசிக்கும் மக்கள் மின்சாரமின்றித் தவித்தனர்.

நாரேல் சூறாவளி மார்ச் 28ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகக் குறைந்தது.

இந்த நிலையில் செவ்ரான், உட்சைட் ஆகியவற்றால் நிர்வகிக்கப்படும் திரவ எரிவாயு ஆலைகளில் ஒரு மாதமாக நீடிக்கும் ஈரான் போரால் நெருக்கடி தொடர்கிறது.

“தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் இல்லை,” என்று உட்சைட் ஆஸ்திரேலியா மார்ச் 29ஆம் தேதி வெளியிட்ட தகவலில் தெரிவித்தது.

அந்நிறுவனத்தின் வடமேற்கு ஷெல்ஃப் திட்டமான கராத்தா எரிவாயு ஆலையிலும் புயலால் மார்ச் 28ஆம் தேதி இடையூறு ஏற்பட்டிருந்தது. ஆனால் அதன் மேசிடான், புளூட்டோ ஆலைகளில் உற்பத்தி பாதிக்கப்படவில்லை. செவ்ரான், உடனடியாக நிலைமை குறித்துப் பதிலளிக்கவில்லை. நரேல் புயலால் ஏற்பட்ட உற்பத்தித் தடைகளால் தனது கோர்கான், வீட்ஸ்டோன் எரிவாயு ஆலைகளில் உற்பத்தியை மீட்டெடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக அது கூறியது. கோர்கான், ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய திரவ எரிவாயு ஏற்றுமதி ஆலையாகும். இது மூன்று சுத்திகரிப்புப் பிரிவுகளுடன் ஆண்டுக்கு 15.6 மில்லியன் டன் திரவு எரிவாயுவை உற்பத்தி செய்கிறது. வீட்ஸ்டோன் ஆலையில் இரண்டு பிரிவுகள் மூலம் 8.9 மில்லியன் டன் எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கிடையே வெஸ்ட் ஆஸ்திரேலிய மாநிலத் தலைநகரான பெர்த்திலிருந்து சுமார் 1,100 கி.மீட்டர் வடக்கே எக்ஸ்மவுத்தில் குடியிருக்கும் 2,800 மக்கள் மார்ச் 28 அன்று இரவு வரை மின்சாரமின்றித் தவித்தனர்.

அரசுக்குச் சொந்தமான ஹரைஸன் பவர் நிறுவனம், “பாதுகாப்பான சூழல் ஏற்பட்டவுடன் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மின்சாரத்தை மீண்டும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றது.

யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளமாகப் பட்டியலிடப்பட்ட நிங்கலூ பவளப்பாறைக்குச் செல்லும் நுழைவாயிலாக எக்ஸ்மவுத் விளங்குகிறது. புயலால் அவ்வட்டாரத்திற்குக் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழகம் தெரிவித்தது.

நரேல் புயல், மார்ச் 20ஆம் தேதி குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் தீவிரமான வெப்பமண்டலப் புயலாகக் கரையைக் கடந்து வடக்கு வட்டாரங்களைப் பதம்பார்த்து மேற்கு ஆஸ்திரேலியாவைத் தாக்கியது.

குறிப்புச் சொற்கள்