மலேசியாவில் போதைப் பொருளுடன் ஓரின விருந்து: 51 பேர் கைது

மலேசியாவில் போதைப் பொருளுடன் ஓரின விருந்து: 51 பேர் கைது

1 mins read
f113f63d-b5e4-42cc-b616-cae303eabe4b
நான்கு வெவ்வேறு சோதனைகளில் 28 வெளிநாட்டவர்கள் உட்பட 51 பேர் கைது செய்யப்பட்டனர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: மலேசியாவில் கோலாலம்பூர் ஹோட்டலில் நடைபெற்றதாகக் கூறப்படும் போதைப் பொருளுடன்கூடிய ஓரின விருந்து நிகழ்ச்சி தொடர்பில் காவல்துறை 51 ஆண்களை கைது செய்தது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மலேசியாவில் ஓரினச் சேர்க்கை குற்றமாகும். அந்நாட்டில் குடிமைச் சட்டத்துடன் இஸ்லாமிய சட்டமும் பின்பற்றப்படுகிறது.

இந்நிலையில் ஷரியா சட்டத்தின்படி ஓரினச் சேர்க்கை குற்றமாகக் கருதப்படுகிறது. ஒருவர் மற்ற பாலின உடை அணிவதும் குற்றமாகும்.

காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (மே 24) மேற்கொண்ட நான்கு வெவ்வேறு சோதனைகளில் 28 வெளிநாட்டவர்கள் உட்பட 21 முதல் 52 வயது வரையிலான 52 பேர் கைது செய்யப்பட்டனர் என்று போதைப் பொருள் புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் ஒமர் கான் மே 25ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

ஏறக்குறைய 103,070 ரிங்கிட் (S$33,000) மதிப்பிலான போதைப் பொருள்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர். இவற்றில் எக்ஸ்டசி, கீடமைன் போன்றவையும் அடங்கும்.

“இந்தக் குழுவினர் உயர்தர ஹோட்டல்களில் உள்ள அறைகளைக் கேளிக்கைக்காகவும், போதைப்பொருள் பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்தி வந்ததும், ஒழுக்கமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,” என்று கூறிய அவர், இந்தச் சம்பவம் போதைப்பொருள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
போதைப் பொருள்சோதனைகைது