பாலஸ்தீன உள்ளாட்சி தேர்தலில் காஸாவாசிகளும் வாக்களித்தனர்

பாலஸ்தீன உள்ளாட்சி தேர்தலில் காஸாவாசிகளும் வாக்களித்தனர்

1 mins read
போர் தொடங்கி இரண்டு ஆண்டுகளில் நடந்த முதல் உள்நாட்டு தேர்தல்
d8519c2a-6128-4fe4-99ad-e393f5063558
வாக்களித்த பிறகு, பாலஸ்தீன ஆடவர் தனது வலது ஆள்காட்டி விரலைக் காட்டுகிறார், - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

கெய்ரோ/ரமலா: பாலஸ்தீனத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 25) நடந்த உள்ளாட்சி தேர்தலில் காஸாவில் குடியிருப்போரும் கடந்த 20 ஆண்டுகளில் தற்போது முதன்முறையாக வாக்களிக்க வாய்ப்பளிக்கப்பட்டது.

மேற்குக் கரையை (வெஸ்ட் பேங்க்) அடித்தளமாகக் கொண்டு செயல்படும் பாலஸ்தீன ஆணையம், காஸாவின் டெயர் அல் பலாவையும் உள்ளாட்சி நகரங்களில் ஒன்றாக சம்பிராதாயத்துக்கென தேர்தலில் இணைத்தது. அதன்படி, போரால் பெருஞ்சேதமடைந்துள்ள காஸாமீதான அதிகாரத்தை மீட்டெடுக்க திட்டமிடுகிறது அந்த அமைப்பு.

கடந்த 2007ஆம் ஆண்டில் ஹமாஸ் போராளி அமைப்பு, பாலஸ்தீன ஆணையத்தை காஸாவிலிருந்து வெளியேற்றியது. பாலஸ்தீனம் என்ற நாடு இருப்பதை ஒழிப்பதையே இஸ்ரேல் குறியாகக்கொண்டுள்ள இச்சமயத்தில் இந்த தேர்தல் நடந்துள்ளது.

அடிப்படை வசதிகளே இல்லாமல் காஸாவில் வாழ்வோர், வழங்கப்பட்ட வாய்ப்பை பெரிதும் வரவேற்றுள்ளனர்.

காஸா, மேற்குக் கரை இரு பகுதிகள்மீதும் இஸ்ரேல் தொடர்ந்து அதிகாரம் செலுத்துகிறது

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி, அமெரிக்காவின் தலைமையில் ஹமாஸ் குழுவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே சண்டை நிறுத்தம் நடப்பில் உள்ளது. அனைத்துலக நாடுகளின் மேற்பார்வையோடு காஸாவின் மறுநிர்மாணம் குறித்து இடையே நடந்த சில பேச்சுவார்த்தைகளில் நிரந்தர தீர்வுக்கான எவ்வித முன்னேற்றமும் இடம்பெறவில்லை.

சுதந்திர காஸாவை பாலஸ்தீன ஆணையம் கட்டுப்படுத்தப்பட்ட ஆளுமையோடு மீண்டும் ஆட்சி செய்ய அண்மையில் ஐரோப்பிய, அரபு நாடுகள் இணக்கம் தெரிவித்திருந்தன. அதன்படி, இஸ்ரேலின் தொடர் ஆக்கிரமிப்போடு, காஸா, கிழக்கு ஜெருசலம், மேற்குக் கரை ஆகிய பகுதிகள் அதன் ஆட்சிக்கு உட்பட்டிருக்கும்.

குறிப்புச் சொற்கள்