யங்கோன்: மியன்மாரின் ராணுவ ஆட்சி டிசம்பர் 28ஆம் தேதி தொடங்கும் வாக்களிப்புக்கு தலைமை தாங்க உள்ளது. கடைசியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை ராணுவம் அகற்றியபோது உள்நாட்டுப் போர் வெடித்தது. இப்போது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஜனநாயகத்திற்குத் திரும்புவதற்கான ஒரு வழியாகக் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.
முன்னாள் அரசாங்கத் தலைவர் திருவாட்டி ஆங் சான் சூச்சி இன்னும் சிறையில் இருக்கிறார். மேலும் அவரது மிகவும் பிரபலமான கட்சி பிப்ரவரி 2021ல் நாட்டின் பத்தாண்டுகால ஆட்சிக்குப் பிறகு கலைக்கப்பட்டது.
ஒரு மாத காலம் கட்டம் கட்டமாக நடக்கவிருக்கும் வாக்கெடுப்பை, ராணுவ ஆட்சியின் மறு ஆதிக்கம் என்று அனைத்துலகக் கண்காணிப்பாளர்கள் நிராகரித்துள்ளனர். ராணுவத்துக்கு ஆதரவான பங்காளிகளுடன் கூடிய வாக்களித்தலுடன் ராணுவ எதிர்ப்புகளைக் கடுமையாக ஒடுக்கும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
சுமார் 50 மில்லியன் மக்கள் வசிக்கும் நாடு உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாக்கெடுப்பு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடைபெறாது.
ராணுவ ஆட்சிக் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில், டிசம்பர் 28ஆம் தேதி காலை 6 மணி (சிங்கப்பூர் நேரப்படி காலை 7.30 மணி) முதல் மூன்று சுற்று வாக்குப்பதிவு நடைபெறும். இதில் யங்கோன், மண்டலே, தலைநகர் நேப்பிடோ ஆகியவற்றில் உள்ள தொகுதிகளும் அடங்கும்.
“ராணுவம் தாங்கள் பலவந்தமாகக் கைப்பற்றிய அதிகாரத்தைச் சட்டப்பூர்வமாக்க முயற்சிக்கிறது,” என்று வடக்கு நகரமான மைட்கினாவில் வசிக்கும் ஒருவர் ஏஎஃப்பியிடம் கூறினார். ஆகவே இந்த வாக்கெடுப்பைப் புறக்கணிப்பதாக அவர் உறுதியளித்தார்.
“இந்தத் தேர்தலில் கிட்டத்தட்ட யாருக்கும் ஆர்வம் இல்லை. ஆனால் சிலர் வாக்களிக்காவிட்டால் பிரச்சினையைச் சந்திக்க நேரிடும் என்று கவலைப்படுகிறார்கள்,” என்று பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் குறிப்பிடாமல் பேசிய 33 வயதான மைட்கினா பகுதியின் குடியிருப்பாளர் கூறினார்.
ஏஎஃப்பி செய்தித் தளத்தின் நேர்காணல் கோரிக்கைகளுக்கு ராணுவ ஆட்சிக்குழு தலைவர் மின் ஆங் ஹ்லைங் பதிலளிக்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
மியன்மாரின் தற்போதைய அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ், நாடாளுமன்ற இடங்களில் 25 விழுக்காடு ஆயுதப்படைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“இந்தத் தேர்தல்கள் மியன்மாரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பங்களிக்கும் என்று யாரும் நம்புவதாகத் தெரியவில்லை.” என்று ஐ.நா. தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அக்டோபரில் கூறினார்.
இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு 2026 ஜனவரி 11ஆம் தேதி நடைபெறும். அதே நேரத்தில் மூன்றாவது மற்றும் இறுதி சுற்றுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

