வரலாறு காணாத அளவில் பலருக்குக் குடியுரிமை வழங்கிய ஜெர்மனி

வரலாறு காணாத அளவில் பலருக்குக் குடியுரிமை வழங்கிய ஜெர்மனி

1 mins read
a083364e-9891-41d7-8ab8-5744d45a21f2
ஜெர்மனி தலைநகர் பெர்லின். - படம்: குளூக்

பெர்லின்: ஜெர்மனி இதுவரை இல்லாத அளவில் 2025ஆம் ஆண்டில் 332,500 பேருக்குக் குடியுரிமை வழங்கியிருக்கிறது.

அந்த எண்ணிக்கை, முந்தைய ஆண்டு பதிவானதைவிட 14 விழுக்காடு அதிகமாகும்.

புதிதாகக் குடியுரிமை பெற்றவர்களில் ஆக அதிகமானோர் சிரியாவைச் சேர்ந்தவர்கள். தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இவ்வாறு இருந்துவருகிறது.

ஜெர்மனியின் மத்திய புள்ளிவிவர அலுவலகம் புதன்கிழமை (ஜூன் 3) வெளியிட்ட புள்ளிவிவரங்களில் இத்தகவல்கள் தெரியவந்தன.

குடியுரிமை பெற்ற சிரியர்கள்

சென்ற ஆண்டு புதிதாக ஜெர்மனி குடியுரிமை பெற்றவர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் சிரியாவைச் சேர்ந்தவர்கள். எனினும், 2024ஆம் ஆண்டு குடியுரிமை பெற்ற சிரியர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் சென்ற ஆண்டு பதிவான எண்ணிக்கை 21 விழுக்காடு குறைவாகும்.

2015, 2016ஆம் ஆண்டு அகதிகளாக ஜெர்மனி வந்த சிரியர்கள் பலர் குடியுரிமை பெறத் தகுதிபெற்றுள்ளனர்.

சிரியர்களுக்கு அடுத்தபடியாக ஆக அதிகமாக துருக்கியிலிருந்து வந்தவர்கள் ஜெர்மனி குடியுரிமை பெற்றனர். புதிதாகக் குடியுரிமை பெற்ற 10 விழுக்காட்டினர் துருக்கியிலிருந்து வந்தவர்கள்.

அதற்கு அடுத்த நிலையில் ஆக அதிக அளவில் ர‌ஷ்யாவைச் சேர்ந்தவர்கள் ஜெர்மனி குடியுரிமை பெற்றனர். குடியுரிமை பெற்றோரில் ஆறு விழுக்காட்டினர் ர‌ஷ்யாவிலிருந்து வந்தவர்கள்.

குடியுரிமை பெற்ற போஸ்னியர்கள்

போஸ்னியாவிலிருந்து வந்து ஜெர்மனி குடியுரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை 126 விழுக்காடு கூடியது. ஆண்டு அடிப்படையில் போஸ்னியாவிலிருந்து வந்தோரிடையேதான் எண்ணிக்கை ஆக அதிகமாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்