ஜெர்மனியின் ஏஎஃப்டி கட்சிக்கு வெற்றி

ஜெர்மனியின் ஏஎஃப்டி கட்சிக்கு வெற்றி

1 mins read
a0c8c06e-7fdd-4dff-a2fd-6ea94e17665a
ராபர்ட் செசல்மன் 52.8 விழுக்காட்டு வாக்குகளுடன் பழைமைவாத ‘கிறிஸ்டியன் டெமோகிராட்டிக் யூனியன்’ கட்சியின் யர்கன் கோப்பரை வெற்றிகண்டுள்ளார்.  - படம்: ஏஎஃப்பி

பெர்லின்: ஏஎஃப்டி எனப்படும் ‘ஆல்டர்னேட்டிவ் ஃபார் ஜெர்மனி’ கட்சியின் வேட்பாளர் மாவட்ட நிர்வாகிக்கான தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.

பத்தாண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட அக்கட்சியின் வேட்பாளர் ஒருவர் இத்தகைய முக்கியமான பதவியைக் கைப்பற்றியிருப்பது இதுவே முதல்முறை.

ராபர்ட் செசல்மன் 52.8 விழுக்காட்டு வாக்குகளுடன், தற்போது அந்தப் பதவியை வகிக்கும் பழைமைவாத ‘கிறிஸ்டியன் டெமோகிராட்டிக் யூனியன்’ கட்சியின் யர்கன் கோப்பரை வெற்றிகண்டுள்ளார்.

யர்கன் கோப்பர் 47.2 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றார்.

ஏஎஃப்டி கட்சிக்குக் கிடைத்த அந்தப் பதவியை நடுத்தர அளவில் உள்ள ஜெர்மானிய நகரின் மேயர் பதவியுடன் ஒப்பிடலாம் என்றபோதும், இரண்டு காரணங்களினால் அக்கட்சியின் வெற்றியை நாடு முழுவதும் உணரமுடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் கட்சி இடம்பெற்றிருந்தாலும், இதுவரை எந்த ஒரு பகுதியிலும் அதற்கு அரசாங்க அதிகாரம் கொடுக்கப்படவில்லை. அதோடு, பெருமளவில் மாவட்ட வாக்காளர்களின் ஆதரவையும் அது இதற்குமுன் பெறவில்லை.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்