கீவ்: ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கால்களை இழந்த 12 வயது உக்ரேன் சிறுமி, ஞாயிற்றுக்கிழமை உக்ரேனில் நடந்த அரை நெட்டோட்டத்தில் கலந்துகொண்டு அசத்தினார்.
2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரஷ்யா உக்ரேனின் கிழக்குப் பகுதிமீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலை ரஷ்யா ‘சிறப்பு இராணுவ நடவடிக்கை’ என அழைத்தது.
அந்த தாக்குதலில் இருந்து தங்களைத் தற்காத்துகொள்ள யானா ஸ்டெபனென்கோவும் அவரது தாயாரும் அந்த இடத்திலிருந்து தப்பிச்செல்ல முயன்றனர். ஆனால், அவர்களால் முடியவில்லை. அந்த தாக்குதலில் சிக்கிக்கொண்ட யானா தனது இரு கால்களையும் அவருடைய தாயார் ஒரு காலையும் இழந்தனர்.
இந்தத் தாக்குதலில் கிட்டத்தட்ட 60 பேர் கொல்லப்பட்டனர் எனவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் எனவும் உக்ரேன் அரசு தெரிவித்தது.
உக்ரேனின் மேற்குப் பகுதியான லிவிவ் நகரில் உள்ள மருத்துவமனையில் சில மாதங்கள் சிகிச்சை பெற்ற இருவரும் பின்னர் உயர்தர சிகிச்சைக்காகச் கலிபோர்னியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அமெரிக்காவின் ‘ரைட் டு வாக்’ அறக்கட்டளை உதவியுடன் அங்கு அவர்களுக்குச் செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டது. அந்தச் செயற்கை கால்கள் உதவியுடன் அவர்கள் இருவரும் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடக்க ஆரம்பித்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை லிவிவ் நகரில் நடந்த அரை நெட்டோட்டத்தில் கிட்டத்தட்ட 1,900 பேர் கலந்துகொண்டனர்.
இதில் யானாவுடன் கால்களை இழந்த மேலும் சிலர் ஊன்றுகோல் உதவியுடன் பங்கேற்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்தப் போட்டியில் யானா 70 மீட்டர் ஓடினார் என சிஎன்என் தெரிவித்தது.