துருக்கி இடிபாடுகளில் சிக்கிய பெண் பத்துநாட்களுக்குப் பின் உயிருடன் மீட்பு

துருக்கி இடிபாடுகளில் சிக்கிய பெண் பத்துநாட்களுக்குப் பின் உயிருடன் மீட்பு

1 mins read
4695809d-3a10-49c4-8d91-d0cb543fd7d4
படம்: ராய்ட்டர்ஸ் -

துருக்கியில் நிலநடுக்க இடிபாடுகளில் 10 நாள்களுக்கு மேல் சிக்கியிருந்த பெண் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

17 வயது அலேனா ஒல்மெஸ் (Aleyna Olmez) கிட்டத்தட்ட 248 மணி நேரம் அதில் போராடியுள்ளார்.

துருக்கியில் அண்மையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, அதில் கராமான்மாராஸ் (Kahramanmaraş) பகுதியும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. அப்பகுதியில் தான் ஒல்மெஸ் மீட்கப்பட்டுள்ளார்.

உணவு நீர் இல்லாமல், கடும்குளிர், காயம் என பல சோதனைகளுக்குப் பிறகு ஒல்மெஸ் மீட்கப்பட்டது மகிழ்ச்சி தருவதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

ஒல்மெஸ் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் கண் விழித்து பார்ப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் 41,000-க்கும் அதிகமானோர் மாண்டனர்.