கதவைச் சாத்திய காதலி; குளிரால் மாண்ட காதலன்

1 mins read
435133f8-fe57-4229-948e-fe4846d1fb81
குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பெண் தற்போது தான் ஜப்பானியக் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். - கோப்புப்படம்: பிக்சாபே

தோக்கியோ: ஜப்பானில் பெண் ஒருவர் தமது காதலனை வீட்டு மாடத்தில் வைத்து கதவை அடைத்துவிட்டார். ஆடை அணியாத அந்த ஆடவர் கடுங்குளிரால் மாண்டார்.

அந்தப் பெண்ணுக்கு 54 வயது என்றும் அவர் மீது தாக்குதல் மற்றும் மரணத்தை ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இச்சம்பவம் ஜப்பானின் நாகசாக்கி பகுதியில் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்தது.

குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பெண் தற்போது தான் ஜப்பானியக் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஏன் இவ்வளவு காலம் தாமதம் என்ற கேள்விக்கு அதிகாரிகள் பதிலளிக்கவில்லை.

சம்பவம் நடந்த நாளன்று அந்தப் பெண் வேண்டுமென்றே அந்த 49 வயது ஆடவரை மாடத்தில் வைத்துப் பூட்டியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அன்று இரவு வெப்பநிலை 3.7 டிகிரி செல்சியசாக இருந்தது.

மறுநாள் காலை ஆடவர் சிகிச்சைக்காக அவசர உதவிப் பிரிவில் சேர்க்கப்பட்டார். ஆனால் அதன்பின்னர் அவர் உயிரிழந்தார்.

கைது செய்யப்பட்ட பெண் ஏற்கெனவே அந்த ஆடவரைத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளார். தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அந்தப் பெண் மறுத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்