ஜெனிவா: உலகில் அணுவாயுதங்கள் வைத்துள்ள ஒன்பது நாடுகள் அந்த ஆயுதங்களுக்குச் செலவிடும் தொகை, கடந்த ஆண்டு 11 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
அணுவாயுதங்களை ஒழிக்கும் அனைத்துலக இயக்கம் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அணுவாயுதக் கிடங்களைப் நவீனமயமாக்குவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் செய்யப்பட்ட செலவு, ஓராண்டில் 10 பில்லியன் டாலர் அதிகரித்து 100. 2 பில்லியன் டாலர் எனப் பதிவாகியுள்ளது.
அணுவாயுதங்களை முழுமையாக நீக்குவது இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பின் நோக்கம்.
2024ல் அணுவாயுங்களை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் இந்நாடுகள் செலவு செய்த தொகை, ஐக்கிய நாடுகள் அமைப்பின் செலவினத்திற்கு 28 முறை பயன்படுத்தப்படலாம் என்று அறிக்கை குறிப்பிட்டது.
கடந்த ஆண்டில் அமெரிக்காவில் அணுவாயுதங்களுக்கான வருடாந்தர செலவினம் ஆக அதிக அளவில் 5.3 டாலராகப் பதிவாகியுள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
அமெரிக்கா மட்டும் செலவு செய்துள்ள மொத்தத் தொகையான 56.8 பில்லியன் டாலர், அணுவாயுதங்கள் கொண்டுள்ள மற்ற நாடுகள் ஒட்டுமொத்தமாகச் செய்துள்ள செலவைக் காட்டிலும் அதிகமாக உள்ளதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.
சீனா 12.5 பில்லியன் டாலர் செலவு செய்ததும் பிரிட்டன் 10.5 பில்லியன் டாலர் செலவு செய்ததும் பதிவாகியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பிரான்ஸ், இந்தியா, இஸ்ரேல், வடகொரியா, பாகிஸ்தான், ரஷ்யா ஆகிய நாடுகளும் அணுவாயுதங்கள் கொண்டிருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
நேட்டோ அமைப்பைச் சேர்ந்த பிரிட்டனும் மற்ற நாடுகளும் ரஷ்யாவை ஐரோப்பாவின் முக்கிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதுகின்றன.
அந்நாடுகளில் சில, தனது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து கூடுதல் விழுக்காட்டை தற்காப்புச் செலவினத் திட்டங்களை வெளியிட்டுள்ளன.