அமெரிக்காவின் ஒக்கலஹாமா பகுதியில் ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது.
யாரோ ஒரு ஆடவர் தமக்கு உதவி வேண்டும் என்று கத்துவதாகக் காவல்துறை அதிகாரிகளுக்கு அழைப்பு வந்துள்ளது.
உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற இரு அதிகாரிகளும் அந்த கதறலைக் கேட்டு விரைந்து நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டனர்.
'ஹெல்ப்' 'ஹெல்ப்' என்று கேட்ட அந்த சத்தம் இரு அதிகாரிகளையும் மேலும் பதற்றமடையச் செய்தது.
ஒரு பண்ணையைப் போல் இருந்த அந்த இடத்தை நெருங்கியதும் அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
கத்தியது ஆடவர் இல்லை அது ஒரு ஆடு.
அதிகாரிகள் இருவரின் உடலில் பொருத்தப்பட்ட கேமராவில் அனைத்தும் பதிவாகியிருந்தன. அதிகாரிகளின் அத்தனை திட்டமும் இறுதியில் நகைச்சுவையாக மாறியது.
தன் கூட்டத்தை விட்டுப் பிரிந்து வந்ததால் ஆடு கத்தியிருக்கக்கூடும் என்று அதிகாரிகள் கூறிக்கொண்டனர்.

