ஒன்பது வாரச் சரிவில் தங்க விலை

ஒன்பது வாரச் சரிவில் தங்க விலை

படம்: பிக்சாபே

08 Oct 2026 - 12:17 pm

1 mins read

ஆண்டிறுதிக்குள் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பால் தங்கத்தின் விலை ஒன்பது வாரங்களில் ஆக அதிகச் சரிவைச் சந்தித்துள்ளது.

புதன்கிழமை (அக்டோபர் 7) ஓர் அவுன்ஸ் தங்கத்தின் விலை $4,100 அமெரிக்க டாலருக்கு அருகில் இருந்தது. முந்திய நாளைவிட அது 1.3 விழுக்காடு சரிந்து, ஆகஸ்ட் மாதத் தொடக்கத்திற்குப் பிறகு ஆகக் குறைந்தபட்ச விலையை எட்டியது.

ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் புதிய பதற்றங்கள், மத்திய கிழக்குப் போரினால் ஏற்படும் பணவீக்கக் கவலைகளை அதிகரித்துள்ளன.

அத்துடன், ஆண்டிறுதிக்குள் அமெரிக்காவில் மேலும் ஒரு வட்டி விகித உயர்வுக்கான வாய்ப்புகளை முதலீட்டாளர்கள் எதிர்பாரப்பதால், தங்கம் ஒன்பது வாரக் குறைந்தபட்ச விலைக்கு அருகில் வர்த்தகமானது.

முக்கிய நீர்வழியைக் கடக்கும் எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீதான தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது.

அதே வேளை, நவம்பரில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக ஈரானிய இலக்குகள்மீது ராணுவத் தாக்குதல்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அமெரிக்கா பரிசீலிப்பதாகக் கூறப்படுகிறது.

பிப்ரவரி மாதப் பிற்பகுதியில் மத்திய கிழக்கு மோதல் வெடித்ததிலிருந்து தங்கத்தின் விலை ஐந்தில் ஒரு பங்கு குறைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
தங்கம்விலைமத்திய கிழக்கு