உலகின் முன்னணி மின்னஞ்சல் சேவைத் தளமாக ஜிமெயில் (Gmail) உள்ளது.
20 ஆண்டுகளுக்கும் மேலாக மின்னஞ்சல் துறையில் கொடிகட்டிப் பறக்கும் ஜிமெயிலில் மில்லியன்கணக்கான மக்கள் கணக்கு வைத்துள்ளனர்.
இந்நிலையில், பயனீட்டாளர்கள் ஜிமெயில் மின்னஞ்சல் முகவரியை மாற்ற கூகல் அனுமதி வழங்கியுள்ளது.
இளவயதில் வித்தியாசமான பெயர்களில் ஜிமெயில் மின்னஞ்சல் முகவரியைத் தொடங்கியவர்களுக்கு இது மிகுந்த நிம்மதி அளித்துள்ளது.
மின்னஞ்சல் முகவரியின் பெயர் மாற்றினாலும் பயனீட்டாளர்கள் அவர்களது தரவுகளை இழக்க மாட்டார்கள்.
மின்னஞ்சல் முகவரியை மாற்றிக்கொள்ளும் வசதி கட்டங்கட்டமாக ஒவ்வொரு நாட்டிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

