சான் ஃபிரான்சிஸ்கோ: ‘ஆல்ஃபபெட் கூகல்’ நிறுவனம் இந்தியாவிலும் ஜப்பானிலும் உள்ள பயனர்களுக்கு அதன் தேடுதளத்தில் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்தியிருப்பதாகக் கூறியிருக்கிறது.
முதலில் அமெரிக்காவில் மட்டுமே தொடங்கப்பட்ட அந்த அம்சம் இந்த வாரம் இந்தியாவிலும் ஜப்பானிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. பயனர்கள் அதனைப் பயன்படுத்துவதற்குத் தெரிவு செய்யலாம்.
ஜப்பான் பயனர்கள் அதனைத் தங்கள் உள்ளூர் மொழிகளில் பயன்படுத்தலாம். இந்தியாவில் அது ஆங்கில, இந்தி மொழிகளில் கிடைக்கப்பெறும்.
கூகல் தேடுதளம் தகவல்கள் பெறுவதற்குப் பயன்படுகிறது. அது அதன் உரையாடல் இயலியிலிருந்து (சேட்போட்) வேறுபடுகிறது.
கூகலின் செயற்கை நுண்ணறிவு தேடுதளம், மைக்ரோசாஃப்டின் பிங் அம்சத்துடன் போட்டியிடுகிறது.