விளம்பரத்தால் வந்த விணை - $100 பி. டாலர் இழந்த கூகள்

விளம்பரத்தால் வந்த விணை - $100 பி. டாலர் இழந்த கூகள்

1 mins read
33453d34-70be-4a57-8373-6ce9c4721d00
படம்: AFP -

கூகளின் தாய் நிறுவனமான அல்ஃபாபெட் ஒரே நாளில் 100 பில்லியன் டாலரை இழந்துள்ளது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் செயல்படும் கலந்துரையாடல் செயலி ஒன்றை கூகள் வடிவமைத்து வருகிறது. அதன் பெயர் 'பார்ட்' (Bard).

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ChatGPT மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளதால் அதற்கு இணையான தொழில்நுட்பத்தை வெளியிட வேண்டிய கட்டாயத்தில் கூகள் தள்ளப்பட்டது.

அதை பற்றி கூகள் சமூக ஊடகத்தில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.

அதில் ஜேம்ஸ் வெஃப் தொலைநோக்கி கருவி தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. அந்த கேள்விகளுக்க பார்ட் தவறான பதில்களை கூறியது.

இதனால் அந்நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு மூன்று மாதம் காணாத சரிவைக் கண்டது.