தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தவறான அமெரிக்க டாலர்-ரிங்கிட் பணமாற்று விகிதம்; மன்னிப்பு கேட்டுக்கொண்டது கூகல் மலேசியா

1 mins read
7e317028-585d-41f2-9755-0094e3ec2f88
தவறு சரிசெய்யப்பட்டுவிட்டதாகக் கூறிய கூகல் மலேசியா, குழப்பத்திற்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டது. - படம்: தி ஸ்டார்

கோலாலம்பூர்: தவறான அமெரிக்க டாலர்- ரிங்கிட் பணமாற்று விகிதத்தை தனது நிதிப் பக்கத்தில் வெளியிட்டதற்காக கூகல் மலேசியா மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.

“தவற்றைச் சரிசெய்ய, அமெரிக்க டாலர்-ரிங்கிட் பணமாற்று விகிதத்தை வழங்கிய மூன்றாம் தரப்பினரை நாங்கள் உடனடியாகத் தொடர்புகொண்டோம். அந்தத் தவறு தற்போது சரிசெய்யப்பட்டுவிட்டது. குழப்பத்திற்கு நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்,” என்று கூகல் மலேசியா, ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் தெரிவித்தது.

தகவல் நோக்கத்திற்காக மட்டுமே பணமாற்று விகிதங்களை வழங்குவதாக கூகல் சொன்னது.

“நிதி சார்ந்த முடிவுகளை எடுக்க, ‘பேங்க் நெகாரா மலேசியா’ போன்ற அதிகாரபூர்வ தளங்களை நாடுங்கள்,” என்றும் அது கூறியது.

குறிப்புச் சொற்கள்