அமெரிக்க பயனர்களுக்காக ‘மெக்சிகோ வளைகுடா’ என்பதை ‘அமெரிக்க வளைகுடா’ என்று பெயர் மாற்ற கூகுல் மேப்ஸ் திட்டம்

அமெரிக்க பயனர்களுக்காக ‘மெக்சிகோ வளைகுடா’ என்பதை ‘அமெரிக்க வளைகுடா’ என்று பெயர் மாற்ற கூகுல் மேப்ஸ் திட்டம்

1 mins read
84f4ecd5-46f3-4bf4-91f3-407ea81d41f7
இந்த மாற்றம் அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தப்படும். ஆனால் மெக்சிகோவில் மெக்சிகோ வளைகுடா என்றே பெயர் இருக்கும். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்க புவியியல் பெயர்கள் அமைப்பில் அதிகாரபூர்வமாகப் புதுப்பிக்கப்பட்டவுடன், கூகுல் மேப்ஸ் அமைப்பு, மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா என மாற்றும் என்று கூகுல், ஜனவரி 27ஆம் தேதி எக்ஸ் பதிவில் தெரிவித்தது.

இந்த மாற்றம் அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தப்படும். ஆனால் மெக்சிகோவில் மெக்சிகோ வளைகுடா என்றே இருக்கும். இரு நாடுகளுக்கும் வெளியே, கூகல் பயனர்கள் இரு பெயர்களையும் கூகுல் மேப்பில் பார்ப்பார்கள்.

டிரம்ப் நிர்வாகத்தின் உள்துறை அமைச்சு, ஜனவரி 24ஆம் தேதி அன்று மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா என்று அதிகாரபூர்வமாக மாற்றியதாகக் கூறியது. அதேபோல், வட அமெரிக்காவின் மிக உயரமான அலாஸ்கன் சிகரமான தெனாலி, மெக்கின்லி மலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆல்பாபெட்டின் கூகுலுக்குச் சொந்தமான கூகல் மேப்ஸ், மெக்கின்லி சிகரத்துக்கும் இதேபோன்ற மாற்றத்தைச் செய்யும்.

ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், நிர்வாக நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பெயர் மாற்றங்களை அதிபர் டேனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார்.

ஜனவரி மாதத் தொடக்கத்தில் மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம், அமெரிக்கா உட்பட வட அமெரிக்காவை மெக்சிகன் அமெரிக்கா என்று மறுபெயரிட வேண்டும் என்று நகைச்சுவையாகப் பரிந்துரைத்தார். இந்தப் பெயர் இப்பகுதியின் ஆரம்பகால வரைபடத்தில் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்