கூகல் $2.5 பி. மலேசிய முதலீடு, 2030க்குள் 26,500 வேலைகளை உருவாக்கும்: அன்வார்

2030ஆம் ஆண்டுக்குள் 26,500 வேலை வாய்ப்புகள்

கூகல் $2.5 பி. மலேசிய முதலீடு, 2030க்குள் 26,500 வேலைகளை உருவாக்கும்: அன்வார்

2 mins read
பொருளாதார தாக்கம் S$2.5 பில்லியன் (US$3.2 பில்லியன்) வரை எட்டும்
3eff61f9-ffb8-4389-818a-b16064d0a956
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் முக்கிய சந்திப்புக் கூட்டம் நடத்தும் காட்சி. - படம்: அன்வார் இப்ராகிம் ஃபேஸ்ஃபுக்

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் அமெரிக்க நிறுவனமான கூகல் செய்துள்ள S$2.5 பில்லியன் முதலீடு, ஆரம்பக்கட்ட எதிர்பார்ப்புகளைக் கடந்து சிறந்த முறையில் முன்னேற்றம் கண்டுள்ளதாக வியாழக்கிழமை (பிப்ரவரி 26) தெரிவித்தார்.

கூகல், அல்பாஃபெட் நிறுவனங்களின் தலைவரும் தலைமை முதலீட்டு அதிகாரியுமான ரூத் பொராட் மற்றும் அவரது குழுவினருடன் நடந்த இணையக் காணொளி சந்திப்புக்குப் பிறகு திரு அன்வார் அதன் விவரங்களைப் பற்றி கருத்துரைத்தார்.

கடந்த 2024ஆம் ஆண்டில் மலேசியாவில் S$2.5 பில்லியன் (US$2 பில்லியன்) முதலீடு செய்யப்போவதாக கூகல் செய்த அறிவிப்பை மையமாகக் கொண்டு எங்களது இணையப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆரம்பக் கட்ட எதிர்பார்ப்புகளையும் கடந்து திட்டம் முன்னேற்றம் அடைந்துள்ளது ஊக்கமளிக்கின்றது என்று பிரதமர் அன்வார் கூறினார்.

இந்த முதலீடு கூகல் நிறுவனம் மலேசியாவில் அமைக்கவுள்ள முதல் தரவு மையத்தையும் மேகக் கணினி (கிளவுட்) சேவைக்கான உட்கட்டமைப்பையும் உள்ளடக்கியது. அவற்றின் சேவைகள் தொடங்கியதும் 2030ஆம் ஆண்டுக்குள் 26,500 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதோடு அதன் பொருளாதார தாக்கம் S$2.5 பில்லியன் (US$3.2 பில்லியன்) வரை எட்டும் என்று திரு அன்வார் அவரது ஃபேஸ்ஃபுக்கில் பதிவிட்டுள்ளார்.

“இந்த முதலீடு மலேசிய மின்னிலக்கப் பொருளியல் மீதுள்ள தொடர் நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது. தரவு சேவைகளுக்கும் கணினி, செயற்கை நுண்ணறிவு சார்ந்த புத்தாக்கத்துக்கும் வட்டார மையமாக மலேசியா தன்னை நிலைநிறுத்திக்கொள்ள விழையும் தொலைநோக்கையும் இது வெளிக்காட்டுகிறது,” என்று பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

மலேசிய அரசாங்கம் அறிவிக்கப்பட்ட முதலீடுகளுக்கான ஆதரவையும் முறையான ஏற்பாடுகளையும் சீராகச் செய்துவருகிறது என்று திரு அன்வார் தெரிவித்தார். கூகல் மலேசியாவில் மேற்கொள்ள விரும்பும் வேறுபல உத்தேச முதலீடுகளை வரவேற்பதாகவும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்