சாலைக் குழியைச் சரிசெய்ய தவறிய அரசு; சீரமைக்க ஒன்றிணைந்த சமூகம்

சாலைக் குழியைச் சரிசெய்ய தவறிய அரசு; சீரமைக்க ஒன்றிணைந்த சமூகம்

1 mins read
f5e70725-6f6a-4716-a2c1-0eea0824fbf9
மார்ச் 7ஆம் தேதி, மேற்கு ஜாவாவின் பெகாசியில் உள்ள சாலைக் குழியைச் சீரமைத்த பொதுமக்கள். - படம்: ஜென் பர்கர்ஆக்ட்
Google News Preferred Icon

ஜகார்த்தா: கிழக்கு ஜாவாவின் சிடோவோர்ஜோ பகுதியில் இருக்கும் ஜாலான் லிங்கார் திமூர் சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்ற 61 வயது ஆடவர் ஒருவர், அங்கிருந்த குழி ஒன்றில் விழுந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த லாரி அவர்மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே மாண்டார்.

அங்குள்ள பொது வசதிகள் பலவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால், அவற்றைச் சீரமைக்க உள்ளூர் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இருப்பினும், அதிகாரிகள் மெத்தனமாகவே இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், அதிகாரிகளின் பதிலுக்காகக் காத்திருந்து சலிப்படைந்த அப்பகுதி மக்கள், சில வாரங்களுக்கு முன்பு தங்களுக்குள் பணம் வசூலித்து, உள்ளூர் சாலை ஒன்றில் இருந்த பள்ளங்களை அவர்களே சரிசெய்தனர்.

மக்களின் அச்செயல் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்தது.

இந்தக் கூட்டு ஒத்துழைப்பு சமூகத்தின் வலுவான விழிப்புணர்வையும் தங்கள் வட்டாரத்தின்மீது மக்களுக்கு இருக்கும் உரிமையையும் வெளிப்படுத்துவதாகச் சிடோவோர்ஜோ வட்டாரச் சட்டமன்ற உறுப்பினர் முகம்மது ஜகாரியா திமாஸ் பிரதாமா தெரிவித்தார்.

இருப்பினும், சாலை உள்கட்டமைப்பை நிர்வகிக்கும் முறையில் இன்னும் நிறைய மேம்பாடுகள் தேவை என்பதையும் இது உணர்த்துவதாகவும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்