பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் மூவார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சயீது சாதிக் சயீது அப்துல் ரஹ்மானுக்கும் மலேசியத் துணைப் பிரதமர் ஃபடில்லா யூசோஃப்புக்கும் இடையே ஐந்து சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதையடுத்து திரு சயீது சாதிக்கின் தொகுதிக்கு அரசாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மூவார் தொகுதிவாசிகளின் நலன்தான் தமக்கு முக்கியம் என்று திரு சயீது சாதிக் வலியுறுத்தியுள்ளார்.
அதற்காக புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திடவோ அல்லது தமது சொத்துகள் தொடர்பான விவரங்ககளை வெளியிடவோ தயங்கப்போவதில்லை என்றார் அவர்.
அரசாங்க நிதியைப் பெற விதிகிப்படும் அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றத் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.