மாநில வருவாயில் உரிய விகிதத்தை அரசு திருப்பித்தரவேண்டும்: ஜோகூர் மன்னர்

மாநில வருவாயில் உரிய விகிதத்தை அரசு திருப்பித்தரவேண்டும்: ஜோகூர் மன்னர்

1 mins read
73702ef5-ca0b-40d2-8588-7adbdc1d9e3f
ஜோகூர் மாநில மன்னர் இஸ்மாயில். - கோப்புப் படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

ஜோகூர் பாரு: கூட்டாட்சி அரசாங்கம் ஜோகூரின் வருவாயை நியாயமாகத் திருப்பித் தராமல், மாநிலத்தைச் சுரண்டுகிறது என்று ஜோகூர் மாநில மன்னர் இஸ்மாயில் இப்ராஹிம் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜோகூர் பணக்கார மாநிலம் எனினும் அங்கு பேரளவிலான நிதி இழப்பு உள்ளதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

ஜோகூர் மாநிலம் ஆண்டுதோறும் மலேசிய அரசுக்கு 40 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாகப் பங்களிக்கிறது. ஆனால், ஏறக்குறைய 500,000 மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய 2 பில்லியன் முதல் 3 பில்லியன் ரிங்கிட் மட்டுமே மாநிலத்திற்குத் திருப்பிக் கொடுக்கப்படுகிறது என்று சனிக்கிழமை (ஜூர் 20) நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றில் மன்னர் இஸ்மாயில் கூறினார்.

மாநில வருவாயில் குறைந்தபட்சம் 25 முதல் 30 விழுக்காடாவது ஜோகூருக்குத் திருப்பித் தரப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

கோலாலம்பூரின் அனுமதிக்காகக் காத்திருப்பதால் செகாமட் பள்ளிக் கூரைகளை பழுதுபார்ப்பது, பத்து பகாட் சாலைகளைச் சீரமைப்பது, மருத்துவமனை வசதிகளை மேம்படுத்துவது போன்ற திட்டங்கள் பல ஆண்டுகள் தாமதமாவதை அவர் சுட்டிக்காட்டினார்.

அரசுடன் பகைமையை வளர்க்க விரும்பவில்லை என்றும், நாட்டின் பொருளியலுக்கு முக்கியப் பங்காற்றும் ஜோகூர் மக்களை மலேசிய அரசு ஒரு கூட்டாளியாக மதித்து, அவர்களின் நலனில் தீவிர அக்கறை காட்ட வேண்டிய நேரம் இது என்றும் மன்னர் இஸ்மாயில் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாஜோகூர்வருவாய்நிதி