தேர்தல் ஆணையத்துக்குப் புதிய தலைவர் தேர்வு: அன்வார்

தேர்தல் ஆணையத்துக்குப் புதிய தலைவர் தேர்வு: அன்வார்

1 mins read
ffcf8606-ce5f-430a-9782-364690d8625a
தேர்தல் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படும் நபர் உரிய நடைமுறைகளின்படி நியமிக்கப்படுவார் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறினார். - படம்: ஏஎஃப்பி

கோலாலம்பூர்: மலேசியத் தேர்தல் ஆணையத்தின் அடுத்த தலைவர் யார் என்பதை அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

திரு அப்துல் கனி சாலேக்குப் பதிலாக ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படும் நபர் உரிய நடைமுறைகளின்படி நியமிக்கப்படுவார் என்று அவர் கூறினார்.

பெர்ஜாயா டைம்ஸ் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 26) நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய திரு அன்வார், “உரிய நடைமுறைகளை நாங்கள் பின்பற்றுவோம். ஆணையத் தலைவரின் நியமனத்திற்கு மாமன்னரின் அனுமதி எங்களுக்குத் தேவை,” என்று சொன்னார்.

2020 ஆகஸ்ட் மாதத்திலிருந்து தேர்தல் ஆணைய தலைவராக இருந்துவந்த திரு அப்துல் கனி, கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மே 9ஆம் தேதி அப்பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்றார்.

தேர்தல் ஆணையர்கள், அதிகாரிகளின் நியமன நடைமுறை வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று ஆணையத்தின் துணைத் தலைவர் அஸ்மி ஷரோம் சனிக்கிழமை கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, திரு அன்வார் மேற்கண்டவாறு கருத்துரைத்தார்.

குறிப்புச் சொற்கள்